இலங்கை கிறிஸ்தவ மாணவ இயக்கத்தினால் சுற்றுச்சூழல் நீதி என்னும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட பல்கலைக்கழக கிறிஸ்தவ மாணவர்களுக்கான பயிற்சிபட்டறை இம்மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் தொடர்பாக வகுப்பறை கல்விக்கு அப்பால் கள அனுபவங்களை பெறும் நோக்கில் முன்னெடுக்கபட்ட இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் கிறிஸ்தவ நாகரிகத்துறை மாணவர்கள் உட்பட கொழும்பு, களனி, பேராதனை, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கிறிஸ்தவ மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஹினிதும ஜின் கங்கை, தேயிலைத் தொழிற்சாலை, வைற் ஜங்கிள் கடற்கரை, யால தேசிய வனம், காலி கோட்டை, ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட சீர்திருத்தத் திருஅவை ஆலயம், வைத்தியசாலை, அருங்காட்சியகம் மற்றும் பொலிஸ் நிலையத்தை நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் அவற்றின் வரலாற்று தகவல்கள் சூழமைவு போன்ற தகவல்களையும் அறிந்துகொண்டனர்.
19ஆம் நூற்றாண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மாணவ கிறிஸ்தவ இயக்கம் 2024ஆம் ஆண்டு 110வது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதுடன் நீதி, சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பணியாற்றி வருவதுடன் இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே நல்லிணக்க சிந்தனைகளையும், சுற்றுச்சூழல் பிரக்ஞையையும் ஏற்படுத்தும் நோக்குடன் பல பணிகளை முன்னெடுத்துவருகின்றமையும்
இங்கு குறிப்பிடத்தக்கது.