நெடுந்தீவு பங்கின் சென் அன்ரனீஸ் நிலாஜோதி முத்தமிழ் மன்ற தயாரிப்பில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் நீ. மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவில் உருவான “பலிக்களம்” திருப்பாடுகளின் ஆற்றுகை கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை பரமதாஸ் பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்வாற்றுகையில் 120 கலைஞர்கள் பங்குபற்றியதுடன் திரு. ஜோசப் அனெக்சன் அவர்கள் ஆற்றுகையை நெறியாள்கை செய்திருந்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம், நெடுந்தீவு பிரதேச செயலகர் திருமதி நிவேதிகா கேதீசன், அரச உத்தியோகத்தர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இந்து மதகுரு புவனேந்திர சர்மா, பங்குமக்கள், இந்துமத மக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin