யாழ்ப்பாணம் பலாலி வடக்கு அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 28ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பலாலி விண்மீன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு. சபா விஜயகுமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் OFERR CEYLON எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் திரு. பேரின்பநாயகம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.