பருத்தித்துறை மறைக்கோட்டத்தின் வடமராட்சி பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு பருத்தித்துறை மறைக்கோட்ட திருவழிபாட்டு இணைப்பாளர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 19ஆம் திகதி சனிக்கிழமை தும்பளை லூர்து அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலைய இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்” பற்றி சாட்டி சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிகாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களும் “திருவழிபாட்டு திரு இசை” என்னும் தலைப்பில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களும் மற்றும் யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஒழுங்கு தொடர்பாக அருட்தந்தை தயாகரன் அவர்களும் கருத்துரைகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள் மற்றும் இறைமக்களென 120 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தார்கள்.


