பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுக்கான கூட்டமும் தவக்கால தியானமும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், இறைவார்த்தைப் பகிர்வு என்பன இடம்பெற்றன.

தியானத்தை தொடரந்து கழக அங்கத்தவர்களுக்கான கூட்டம் நடைபெற்றதுடன் செம்பியன்பற்று தாளையடி பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களால் தவக்காலம் மற்றும் யூபிலி ஆண்டு தொடர்பான கருத்துரையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் 60ற்கும் அதிகமான கழக அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

 

By admin