மன்னார் மறைமாவட்ட ஆட்காட்டிவெளி பங்கிற்குட்பட்ட பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தையும் மாந்தை மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை யூட் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன.

08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 10ஆம் திகதி நற்கருணை விழாவும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் திருவிழாவும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை மன்னார் மடுத்திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியில் நாட்டில் பல இடங்களிலிருந்தும் 5000ற்கும் அதிகமான பக்தர்கள் பங்குபற்றியதுடன் திருவிழா அன்று மதியம் இயேசுவினுடைய சிலுவைக்காட்சி தியானமும் அங்கு நடைபெற்றது.

By admin