பரந்தன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரந்தன் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது.
கிளிநொச்சி மறைமக்கோட்ட முதல்வரும் பரந்தன் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பரந்தன் திருச்சிலுவை கன்னியர் மட அருட்சகோதரி இமாகுலேற் ஜோசேப் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.