பண்டத்தரிப்பு மற்றும் மாதகல் பங்குமக்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை கடந்த 20ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

பண்டத்தரிப்பு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி அமிர்தராணி அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இவ்யாத்திரையில் பங்குமக்கள் கொழும்பு சுபுவத் அரண, உடுகமவிலுள்ள கினிதும மற்றும் றாகம யாத்திரைத்தலங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், திருப்பலி என்பவற்றில் பங்குபற்றினர்.

இந்நிகழ்வில் 55 பேர் பங்குபற்றியிருந்தனர்.

By admin