யாழ். பண்டத்தரிப்பு ஜசிந்தா றோ.க.த.க. பாடசாலையின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி கடந்த 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதிபர் திருமதி. தர்மினி பாலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராகவும் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல பரிபாலகர் அருட்தந்தை யேசுதாசன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வலிகாம வலய ஆரம்பகல்வி ஆசிரியர் ஆலோசகர் திருமதி. செல்வராணி டினேஸ் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.

By admin