அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு மன்னார் மறைமாவட்ட கலையருவி சமுகத்தொடர்பு அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகள் கடந்த 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன.
மறைமாவட்ட சமுகத்தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை லக்ஸ்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கலையருவி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்போட்டிகளில் மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த மாணவர்கள், இளையோர்கள், திருமணமானவர்களென 80ற்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இப்போட்டிகள் 2019ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.