அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி பாடல் போட்டிகளை நடாத்த இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இப்போட்டிக்கு கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்கள் குழுவாக விண்ணப்பிக்க முடியுமெனவும் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறும் இப்போட்டியில் பங்குபற்றும் ஒரு குழுவில் ஆகக்குறைந்தது 8 உறுப்பினர்களும் கூடியது 12 உறுப்பினர்களும் பங்குபற்ற முடியுமெனவும் திணைக்கள பணிப்பாளர் திருமதி சதுரி பிந்து அவர்கள் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள் குழுவின் பெயர், விலாசம், குழுப்பொறுப்பாளரின் தொலைபேசி இலக்கம், WhatsApp செயலி இலக்கம் என்பவை உள்ளடங்கலாக விண்ணப்பபடிவத்தை தயாரித்து அதனுடன் பங்குத்தந்தை அல்லது பாடசாலை அதிபரின் சிபாரிசு கடிதத்தை இணைத்து பணிப்பாளர், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், 3ஆம் மாடி, இல 180, டீ.பீ.ஜாயா மாவத்தை, கொழும்பு 10 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது தொலைநகல் ஊடாகவோ அனுப்பிவைக்க முடியுமென மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin