நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரியின் புதிய முதல்வராக அருட்சகோதரி மரீனா சகாயம் அவர்கள் 1ஆம் திகதி கடந்த புதன்கிழமை பணிப்பொறுப்பேற்றுள்ளார்.
யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர்சபை தலைமைத்துவ குழுவின் ஆலோசகர் அருட்சகோதரி அன்ரனிற்ரா மார்க் அவர்களின் முன்னிலையில் அருட்சகோதரி அவர்கள் தனது புதிய பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.