நெடுந்தீவு புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 9ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை வலைப்பாடு பங்குத்தந்தை லியான்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

