நெடுந்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருமுழுக்கு யோவானின் பாடுகள் நினைவு திருவிழா அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
26ஆம் கடந்த சனிக்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ் புனித. சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை செல்வரெட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.