தேசிய கலை இலக்கிய பேரவையும் இளவாலை திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய “நூறு மலர்கள் மலரட்டும்” புத்தக அரங்க விழா 22,23ஆம் திகதிகளில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.

22ஆம் திகதி சனிக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் திரு. றொபின்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஈழத்து நூல்களான இரகசியங்கள், நோவிலும் வாழ்வு, அபிரால் ஆகிய நானும் ஆதிரா என்றொரு அவளும், தாயகம் ஆசிரியர் தலையங்கங்கள் ஆகிய நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன.

தொடர்ந்து 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீராவின் தம்பி, சிறகை விரித்து பறப்போம், மரணங்களின் சாட்சியாக, ஆற்றுப்படுத்தும் கலையும் சிலையும் ஆகிய நூல்களின் அறிமுகமும் இடம்பெற்றன.

இரண்டு நாள் நிகழ்வுகளிலும் புத்தக கண்காட்சி, நூல் அறிமுகத்தை தொடர்ந்து மாலை நிகழ்வுகளாக கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் பங்குபற்றினர்.

By admin