திருகோணமலை மறைமாவட்டத்தின் நிலாவெளி மற்றும் திருகோணமலை மறைக்கோட்டங்களை சேர்ந்த இளையோருக்கான கூட்டம் 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இளையோருக்கான ஒன்றுகூடலும் மறைக்கோட்டங்களுக்கான புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 30 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.