இலங்கை அரசினால் முன்வைக்கப்பட்ட நிகழ்நிலை காப்பு சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ ஒன்றிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்:
– நாட்டு மக்களை அச்சமூட்டும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
– பேச்சுச்சுதந்திரத்தை அச்சுறுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
– சிந்தனைப் பகிர்வை அச்சுறுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
– ஜனநாயஉரிமையை பறிக்கும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
– ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
– சமூக ஊடகங்களை அகற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை மீளப்பெறு
போன்ற வாசகங்களை பதாதைகளாக தாங்கியிருந்தார்கள்.