மடு அன்னையின் யாழ். வருகைக்கு ஆயத்தம் செய்யும் முகமாக நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட மடு அன்னையின் திருச்சொருப பவனி பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை நடைபெற்றது.
அருட்சகோதரி நிசா அவர்களின் வழிநடத்தலில் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மடு அன்னையின் திருச்சொருபம் அன்பியங்களுக்கு பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு செபமாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர்.