நாவாந்துறை பங்கில் உறுதிப்பூசுதல் அருட்சாதனம் பெறவிருக்கும் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் தலைமையில் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
நாவாந்துறை பங்கு மாணவர்கள் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற பாசறை நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.
அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சுதர்சன் மற்றும் நாரந்தனை பங்குத்தந்தை அருட்தந்தை நிஜந்தன் அகியோர் கலந்து கருத்துரை வழங்கினார்கள்.
கருத்துரைகள் குழு செயற்பாடுகள், குறும்படம், குழுவிளையாட்டுக்கள் என்பன இடம்பெற்ற இந்நிகழ்வில் 100 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

