நாவாந்துறை பங்கில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் 15ஆம் திகதிகளில் புனித நீக்கிலார் மற்றும் புனித பரலோக மாதா ஆலயங்களில் நடைபெற்றன.
இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய இவ்வழிபாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பக்தியுடன் கலந்துகொண்டனர்.
அத்துடன் உயிர்த்த ஆண்டவர் சமூகத்தால் இளவாலை யாகப்பர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட குணமாக்கல் வழிபாடும் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, திருப்பலி என்பவை இடம்பெற்றன.
