நாயாறு புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எமில்போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் உதவியுடன் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
26ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 27ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது.திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபை அருட்தந்தை நிர்மல் சுரஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
சிலாபம் கருக்குப்பனை பிரதேச கடற்தொழிலாளர்கள் அங்கிருந்து நாயாறு பிரதேசத்திற்கு வருகைதந்து வாடிகளை அமைத்து கோடைகால கடற்தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களுக்கான நிரந்தர ஆலயம் கடற்படையினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருப்பதால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இவ் ஆலயத்திலேயே அனைத்து ஆன்மீக செயற்பாடுகளையும் இவர்கள் மேற்கொண்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.