உயிர்த்த ஆண்டவர் சமூகத்தின் ஏற்பாட்டில் மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட நான்கு படிமுறை ஞான ஒடுக்கம் கடந்த 01, 02ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் தலைமையில் தவக்கால ஆயத்த நிகழ்வாக முன்னெடுக்கப்பட்ட இஞ்ஞானெடுக்கத்தில் இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு, இறை அனுபவ பகிர்வு என்பவற்றுடன் ஞான ஒடுக்க நிறைவில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் திருப்பலியும் இடம்பெற்றது.

இவ்வழிபாடுகளில் இறைமக்கள் பலரும் பக்தியுடன் கலந்துசெபித்தனர்.

By admin