கனடா திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமரர் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் மற்றும் திருமறைக்கலாமன்ற ஸ்தாபக இயக்குநர் அமரர் அருட்தந்தை மரிய சேவியர் ஆகியோரின் நான்காம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை பங்கில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை பேணாட் அவர்கள் தலைமையில் திருப்பலி நடைபெற்றதுடன் திருப்பலியை தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் குருக்கள், திருமறைக்கலாமன்ற உறுப்பினர்கள், அருட்தந்தை மற்றும் ஆயர் அவர்களின் குடும்ப உறவுகள், பங்கு மக்களென 300ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.