நற்கருணை பணியாளர்களுக்கான பணிப்பொறுப்பு வழங்கும் நிகழ்வு மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் குருநகர் பங்கைச் சேர்ந்த திரு. நோபேட் சகாயநாதன், திரு. பாஸ்கரன் லூக் டிமெல்சன் மற்றும் சுண்டுக்குளி பங்கை சேர்ந்த திரு. பேரின்பநாயகம் மரிய கருணைநாயகம் ஆகியோர் நற்கருணை பணியாளர்களாக தமது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள்.

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகத்தின் வழிநடத்தலில் இவர்கள் நற்கருணைப் பணியாளர்களாக உருவாக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரசாகம் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

By admin