கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் நத்தார் தபால் முத்திரைக்கான சித்திரப்போட்டி இவ்வருடமும் நடைபெறவுள்ளது.
2 தலைப்புக்களில் 4 பிரிவுகளாக நடைபெறவுள்ள இப்போட்டியில் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கும் 10-15 வயதுக்குட்பட்டவர்களுக்கும் “மேய்ப்பர்களை தெய்வீக முழந்தையிடம் அழைக்கும் தந்தையின் அன்பு” என்னும் தலைப்பிலும் 15-21 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கும் 21 வயதுக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் “இயற்கையின் வழிகாட்டும் நட்சத்திரம் “மாகி” நம்மை கடவுளிடம் அழைக்கிறது” என்னும் தலைப்பிலும் சித்திரப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
A4 தாளின் கிடைப்பக்கமாக சுற்றி அரை அங்குலம் இடைவெளியுடன் கலர் பென்சில் தவிர்ந்த ஏனைய வர்ணங்களைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து படைப்பின் பின்புறத்தில் படைப்பாளரின் விபரங்களை குறிப்பிட்டு பங்குத்தந்தை மறைக்கல்வி பிரதான ஆசிரியர் சமாதான நீதவான் அரச சேவையில் பதவி நிலை வகிக்கும் உத்தியோகத்தர் யாராவது ஒருவரின் சிபாரிசுடன் 2023 ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பாக பணிப்பாளர் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் மூன்றாவது தளம் இலக்கம் 180 டி.பி.ஜயா மாவத்தை கொழும்பு 10 என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியுமென கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.