கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மொழி தினப்போட்டிகள் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பாலச்சந்திரன் கீர்த்தனன் கீழ்ப்பிரிவு ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.