தேசிய கல்வியியற் கல்லூரியின் 20ஆம் அணி கிறிஸ்தவ மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி பீடாதிபதி கலாநிதி சுப்ரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஒளிவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கனகரட்ணம் மகா வித்தியாலய ஆசிரியர் திருமதி சுனிதா வெனான்சியஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை ஆசிரியர் அருட்சகோதரி மேரி மொறின் றோசி அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.