தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிநடத்தலில் 17ஆம் திகதி ஆரம்பமாகிய இந்நிகழ்வுகளில் இளையோருக்கான தீப்பாசறை, வழிகாட்டல் கருத்தமர்வு, சிறப்பு வழிபாடுகள், விளையாட்டுக்கள், அதிஸ்ட இலாப சீட்டிழுப்பு போன்றவை இடம்பெற்றன.
இறுதி நாளாகிய 23ஆம் திகதி திங்கட்கிழமை இளையோர்தின சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் நாவாந்துறை நல்லாயன் கன்னியர் மடத்தலைவி அருட்சகோதரி அனி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் செல்வன் பிராங் விதுசன் அவர்களின் நெறியாள்கையில் உருவான‘போதையே நரகம்’ என்ற விழிப்புணர்வு நாடகமும் மேடையேற்றப்பட்டு பலரது பாராட்டினையும் பெற்றுக்கொண்டது.