தேசிய இளையோர் தினத்தை முன்னிட்டு புனித ஜோன் போல் இளையோர் ஒன்றியத்தினரால் பாசையூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இளையோர்களுக்கான சிறப்பு திருப்பலி காலை அங்கு ஒப்புக்கொடுக்கபட்டது.
தொடர்ந்து அன்று மாலை ஆலய முன்னறலில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் வழிநடத்தலில் இளையோர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலைநிகழ்வில் யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் இளையோரின் தயாரிப்பில் விழிப்புணர்வு நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் தொடர்ந்து ஈழத்து இயக்குனர் திரு. மதிசுதா அவர்களின் இயக்கத்தில் “உருவான வெந்து தணிந்தது காடு” திரைப்படமும் காட்சிபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பங்கு மக்கள் பலர் கலந்து கொண்டனர்.