தேசிய அன்பிய ஆணைக்குழு அங்கத்தவர்களுக்கான காலாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ். மiறாவட்டத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தேசிய அன்பிய ஆணைக்குழுவுக்கு பொறுப்பான திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனைத்து மறைமாவட்ட அன்பிய இயக்குனர்கள் மறைமாவட்ட பிரதிநிதிகள் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
பண்டத்தரிப்பு பற்றிமா அன்னை தியான இல்லத்தில் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் அரங்க நிகழ்வுகள், பங்கு தரிசிப்பு, வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களை பார்வையிடுதல் போன்றன இடம்பெற்றன.
பங்கு தரிசிப்பு நிகழ்வில் தேசிய அன்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் மல்வம் திருக்குடும்ப ஆலயத்திற்கு களஅனுவப பயணம் மேற்கொண்டு அங்கு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிகாட்டலில் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களுடன் இணைந்து அன்பிய பங்கு ஊக்குவிப்பாளர்களை சந்தித்து அவர்களுடன் இறைவார்த்தை பகிர்வை மேற்கொண்டனர்.
தொடர்ந்து 25ஆம் திகதி பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தேசிய அன்பிய ஆணைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மறைமாவட்ட அன்பிய செயற்பாட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.