தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்வு கடந்த 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது.

வைத்தியசாலை ஆன்மீக இயக்குநரும் குளமங்கால் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் தலைமையில் குளமங்கால் பங்கு இளையோர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களுக்கான கிறிஸ்மஸ் அன்பளிப்புக்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இக்கிறிஸ்மஸ் அன்பளிப்புக்கில் பெரும்பகுதி குளமங்கால் பங்கிலிருந்தும் ஏனையவை இளவாலை மறைக்கோட்டத்தின் சில பங்குகளிலிருந்தும் சேகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin