தீவக மறைக்கோட்ட மறையாசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட மறைக்கல்வி இணைப்பாளர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தமர்வில் யாழ். பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரீகத்துறை விரிவுரையாளர் திருமதி வினிபிறீடா சுரேந்திரறாஜ் அவர்கள் வளவாளராக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_98.png)