தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய முன்பள்ளியில் நடைபெற்றது.
தீவக மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் இளையோருக்கான சமூக வலைத்தளம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு, தலைமைத்துவ பயிற்சிகள், கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.
தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை றெக்னோ அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறையன் மற்றும் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தீவக மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த 65 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.