தீவகம், புங்குடுதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் கலந்து ‘புனித சவேரியார் பந்தி’ என்னும் பெயரில் புதிய பந்தியை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் மத்திய சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.