தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 5ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
கடந்த மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப தேர்ப்பவனி இடம்பெற்றது.
இத்தேர்ப்பவனி இவ்வாலயத்தில் நடைபெற்ற முதலாவது தேர்ப்பவனி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.