தீவகம் சின்னமடு அன்னை யாத்திரைத்தலத் வருடாந்த திருவிழாவிற்கான ஆயத்தங்கள் பரிபாலகர் அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இந்நிலையில் வருகிற 4ஆம் திகதி ஆவணி மாதம் மாலை 4.30 மணிக்கு திருச்செபமாலையுடன் நற்கருணை விழாவும் 5ஆம் திகதி காலை 7.00 மணிக்கு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறவுள்ளதெனவும் தெரிவித்த பரிபாலகர் அவர்கள் திருவிழாவிற்கு வருகைதரவுள்ள பக்தர்களுக்காக திருவிழா அன்று காலை 5.30 மணி முதல் யாழ். மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பயண ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.