தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட தைப்பொங்கல் நிகழ்வு 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருத்தல பரிபாலகர் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்கமார் கூஞ்ஞ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் பண்பாட்டு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இக்கலைநிகழ்வுகளில் பங்குமக்களின் பாராம்பரிய பாடல், நடனம் என்பன இடம்பெற்றதுடன் நிறைவில் பாடசாலை மாணவர்களுக்கான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களும் 150 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.