திரு அவையில் பல முக்கியமான பொறுப்பு வாய்ந்த பணிகளுக்கு பொதுநிலையினர் நியமிக்கப்பட வேண்டும் என கூட்டொருங்கியக்க மாநாட்டின் இறுதி ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூட்டொருங்கியக்க மாநாடு நிறைவடைந்து இம்மாநாட்டின் பயனாக வெளிவந்த இறுதி ஆவணத்தின் 77ஆம் இலக்கத்திலேயே பொதுநிலையினரின் பணி வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் திருவையின் தேர்ந்து தெளிதல் மற்றும் தீர்மானங்கள் எடுத்தல் ஆகியவற்றில் பொதுநிலையினரின் அதிக பங்களிப்பு தேவையெனவும் சுட்டிக்காட்டப்படுள்ளது.

மறை மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள், குருமடங்கள், இறையியல் கல்லூரிகள் போன்றவற்றில் பொதுநிலையினர் அதிகமாக உள்வாங்கப்பட வேண்டுமெனவும் பொதுநிலையினர் தமது ஆற்றல்கள் அருங்கொடைகளை பயன்படுத்துவதற்கு உற்சாகம் அளிக்கப்பட்டு திரு அவையின் நீதிமன்றங்களில் பணிபுரிவதற்காக இவர்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதுடன், திருஅவையில் பணியாற்றும் பொதுநிலையினரின் மாண்பும் உரிமையும் மதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டுமென்ற முக்கியமான 5 கருத்துக்கள இவ்வாவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

By admin