முல்லைத்தீவு மறைக்கோட்ட புதுக்குடியிருப்பு பங்கின் மந்துவில் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவந்த திருமுக ஆண்டவர் ஆலயம் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களால் அழகிய தோற்றம் கொண்ட இவ் ஆலயத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார். இவ் ஆலயமானது அருட்திரு சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் பணிக்காலத்தில் 2014ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்ஆலய கட்மானப்பணிக்கு திரு. செபஸ்தியாம் பிள்ளை, அமரர் திருமதி. ஜசிந்தா செபஸ்தியாம் பிள்ளை குடும்பத்தினர் பெருமளவு நிதியை அன்பளிப்பு செய்திருந்தார்கள். இவர்களுடைய உதவியை கௌரவிக்குமுகமாக ஆயர் அவர்களினால் திரு. செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் இனணந்து சிறப்பித்தனர். நிகழ்வுகள் அனைத்தும் புதுக்குடியிருப்பு பங்குதந்தையும் , முல்லை மறைக்கோட்ட முதல்வருமாகிய அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.