யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட திருமண வாழ்வில் இணைந்த தம்பதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கான சிறப்பு நிகழ்வு 19ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
கொழும்புத்துறை பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து கருத்தமர்வும் இடம்பெற்றன.
அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் மற்றும் உதவி இயக்குநர் அருட்தந்தை ஜெராட் ஆகியோர் இணைந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் என்பவற்றினூடாக நெறிப்படுத்திய இக்கருத்தமர்வில் திருமண பந்தத்தில் இணைந்து 7- 15 வருடங்களை பூர்த்தி செய்த தம்பதியினர் மற்றும் அவர்களின் பிள்ளைகளென 70 பேர் பங்குபற்றி பயனடைந்தனர்.