அகவொளி குடும்பநல நிலையத்தால் மாதாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற திருமண ஆயத்த வகுப்புக்கள் கடந்த 19ஆம் 20ஆம் திகதிகளில் கிளிநொச்சி மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றன.
அகவொளி குடும்ப நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலமையில் நடைபெற்ற இத்திருமண ஆயத்த வகுப்புக்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மறைக்கோட்டங்களை சேர்ந்த பலர் பங்குபற்றி பயனடைந்தனர்.


