மட்டக்களப்பு மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை கடந்த 18ஆம் திகதி சனிக்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது.

திருப்பாலத்துவ சபை இயக்குனர் அருட்தந்தை நிகஸ்டன் பீட்டர்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை றஜீவா அவர்கள் கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள், கலந்துரையாடல்கள், கலைநிகழ்வுகள் ஊடாக ஊக்குவிப்பாளர்களை வழிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் 30 வரையான ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin