கொய்யாத்தோட்டம் பங்கில் 30ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பாலத்துவ சபைத் தினம் கொண்டாடப்பட்டு பல நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன.
பங்குத்தந்தை அருட்திரு ஆனந்தக்குமார் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலியில் மரக்கன்றுகள் காணிக்கையாக கொடுக்கப்பட்டு திருப்பலி நிறைவில் அம்மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. அத்துடன் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தோசிய திருவிவிலிய அறிவுப்போட்டியில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் மாணவர்களுக்கான மகிழ்வூட்டும் கலை நிகழ்வுகளும் வெளிக்கள தரிசிப்பு நிகழ்வும் இடம்பெற்றன.