திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றும் திருப்பாலத்துவச்சபை ஊக்குவிப்பாளர்களுக்கான கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட மேய்ப்புப்பணி மண்டபத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் இயக்குநர் அருட்தந்தை ரொய்சன் ஸ்பார்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகள், விளையாட்டுக்கள் என்பன இடம்பெற்றன.
மறைமாவட்ட பங்குகளை சேர்ந்த 50 வரையான ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றிய இந்நிகழ்வில் அருட்தந்தை ஜோன்பிள்ளை அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.