திருப்பாலத்துவசபைச் ஊக்குவிப்பாளர்களுக்கான இரண்டாம் நிலைப் பயிற்சிப் பாசறையும் நிரந்தர சின்னம் வழங்கும் நிகழ்வும் கடந்த 19ஆம் 20ஆம் 21ஆம் திகதிகளில் சிலாபம் மறைமாவட்டத்தில் உள்ள மாதம்பே புனித அலோசியஸ் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
திருத்தந்தையின் மறைபரப்பு சபைகளின் தேசிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய இயக்குனர் அருட்தந்தை பசில் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மறைமாவட்டங்களைச் சேர்ந்த 96 ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி நிரந்தர பயிற்சியை நிறைவு செய்தனர்.
யாழ்ப்பாணம் மறைமாவட்டத்திலிருந்து மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை எயின்சிலி றொசான் அவர்களின் தலைமையில் 26 ஊக்குவிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றி பயிற்சியை நிறைவு செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



