திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 08 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
இத்திருப்பலியில் அருட்தந்தை சந்திரபோஸ் அவர்களும் கலந்து செபித்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/12/37.jpeg)