இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக உலகின் பல்வேறு இடங்களில் இரங்கல் திருப்பலிகளும், நினைவேந்தல்களும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் யாழ். மறைமாவட்டத்தில் 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியின் ஆரம்பத்தில் திருத்தந்தையின் உருவப்படத்திற்கு சுடரேற்றி அருட்தந்தையர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இத்திருப்பலியில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து திருத்தந்தையின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபித்தனர்.
திருப்பலி நிறைவில் இறைமக்கள் திருத்தந்தையின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி நிகழ்த்தினர்.