கிறிஸ்மஸ் ஒளி, உடன்பிறப்பு உணர்வை நாம் மீண்டும் கண்டுணரச் செய்வதுடன் தேவையில் இருப்பவர்களோடு தோழமையைக் காட்டுவதற்கு நம்மைத் தூண்டுகிறதென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வத்திக்கானில் கிறிஸ்மஸ் இசைக்குழு ஒன்றுடனான சந்திப்பில் தெரிவித்தார்.
கடவுளின் கனிவை இவ்வுலகிற்கு கொண்டுவந்த நிகழ்வில் நம் கண்களைப் பதிக்குமாறு கிறிஸ்மஸ் அழைப்புவிடுப்பதை சுட்டிக்காடடி இது நம்மில், மகிழ்வு மற்றும், நம்பிக்கையைத் தொடர்ந்து ஏற்படுத்தி வருவதுடன் கனிவு, அன்பில் பிறக்கின்றது என்றும் பெத்லகேம் குடிலில், புதிதாகப் பிறந்த குழந்தையின் அன்னையின் தழுவல், அவரது குடும்பத்தைப் பாதுகாக்கும் தந்தையின் அன்பு, அங்கு அவரை வணங்கவந்த இடையர்கள் போன்ற அனைவரிலும் இந்த உணர்வுகளைக் காண்கிறோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.