திருத்தந்தையின் தேசிய மறைபரப்பு சபையால் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வருடாந்த செயற்திட்ட கூட்டம் 08, 09ஆம் திகதிகளில் குருநாகல் கரித்தாஸ் ஜெனசெத்த நிறுவனத்தில் நடைபெற்றது.
தேசிய இயக்குநர் அருட்தந்தை பசில் றொகான் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் சபையின் கடந்தகால எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் மறைமாவட்ட இயக்குநர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களென 80 பேர் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்டத்திலிருந்து இயக்குநர் அருட்தந்தை எயின்ஸ்லி றொசான் அவர்களுடன் நான்கு செயற்குழு அங்கத்தவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

By admin