திருத்தந்தையின் இலங்கைக்கான திருத்தூது பிரதிநிதி பேரருட்தந்தை பிறாயன் உடேக்குவே அவர்கள் 04ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை பதுளை மறைமாவட்டத்திற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
பதுளை மறைமாட்டத்தின் வெள்ளவாய பங்கில் திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி அவர்கள் ஆயர் குருக்கள் பொதுநிலையினரால் 04ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரவேற்கப்பட்டார்.
அங்கு குருக்கள் துறவிகள் அருட்சகோதரிகளுடன் கலந்துரையாடிய திருத்தந்தையின் பிதிநிதி அவர்கள் Buttala பங்கை தரிசித்து அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள விடுதலை அளிக்கும் இயேசுவின் சுருப கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டியதுடன் அங்கு புத்தமத துறவி மற்றும் சமூகத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து பதுளை மறைமாவட்டத்தின் முதலாவது சர்வதேச கல்லூரியான புனித அந்தோனியார் கல்லூரிக்கு சென்று அங்கு நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
தொடர்ந்து சனிக்கிழமை திருத்தந்தையின் பிரதிநிதி அவர்கள் மொனராகலை பங்கை தரிசித்து அங்கு மறைக்கோட்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து BIBILE பங்கை தரிசித்து பங்குமக்களுடன் கலந்தரையாடியதுடன் மகியந்தனை பங்கிலுள்ள உல்கித்திய கல்வாரி திருத்தலத்திதை தரிசித்தார்.
7ஆம் திகதி இன்று திங்கட்கிழமை வரை பதுளை மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொள்ளும் திருத்தந்தையின் பிரதிநிதி அவர்கள் அங்கு நடைபெறும் பல நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவுள்ளார்.